நோக்கம்

1988-ஆம் வருட தமிழ் நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின் விதி எண். 151(5) மற்றும் அரசாணை நிலை எண். 3, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 05.01.2016-ன்படி, கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரிய தகுதியான நபர்களை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலம் தேர்வு செய்தல்.

குறிக்கோள்

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், திண்டுக்கல் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு குறுக்கீடற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பணியாளர்களை தேர்வு செய்தலை உறுதிப்படுத்துதல்.